தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது.
இன்று (ஜூன் 12) ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
1991 முதல் 1996 வரையிலான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கேள்வியும் பதிலும்
ஊழலை பொறுத்தவரை 1991-96 மிக மோசமான காலகட்டம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?
“தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் நிறைந்தவை. முன்னாள் முதல்வர்கள் ஊழல் காரணமாக நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டனர். அந்தளவுக்கு தமிழ்நாடு ஊழல் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் தமிழ்நாடு முதலிடம் என்று நான் சொல்வேன்”
அதிமுக மற்றும் அதன் தலைவர்களுடனான உறவு எப்படி உள்ளது?
எடப்பாடி பழனிசாமி என்ற தனி நபருக்கும் , அண்ணாமலை என்ற தனி நபருக்கும் இடையே சுமூகமான உறவு இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி என்னுடைய பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நானும் வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் பாஜக மாநில தலைவரான அண்ணாமலைக்கும், அதிமுக தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது”
அதிமுகவுடனான கூட்டணி முறிய வாய்ப்பு உள்ளதா?
“நான் எனது கட்சியை கட்டி எழுப்ப வேண்டும். அதற்காக நான் குரல் கொடுக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் என்பது ஆட்சிக்கு வருவதே ஆகும். அதை தவிர எப்போதும் கூட்டணியில் நீடிப்பது அல்ல”
2026 தேர்தலை அதிமுகவுடன் எப்படி எதிர்க்கொள்ள போகிறீர்கள்?
“அதிமுக வலுவான கட்சி. என்.டி.ஏ கூட்டணியிலும் எங்களுடன் வலுவாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. எனவே இன்னும் காலமிருக்கிறது. திமுக என்பது அதிகாரமும், பண பலமும் கொண்டதாக இருக்கிறது. தற்போது திமுகவுக்கு எதிரான அலை உள்ளது. அது வெளியில் எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்”.
ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்று சேர்வார்கள் என்று நம்புகிறீர்களா?
இது அவர்களது பிரச்சினை. அதிமுகவின் செயல்பாட்டில் நாங்கள் தலையிட மாட்டோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரத்திலும், இரட்டை இலை சின்னத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த சட்டப்பூர்வமான வெற்றிக்கு பாஜக உதவியதா?
என்ன நடந்தாலும் பாஜக முற்றிலுமாக நடுநிலையை கடைபிடிக்கும்.
பிரியா
திமுக தடையாக இருந்ததா?: அமித் ஷாவுக்கு மூர்த்தி பதில்!
விருதுநகர் சிறையில் கைதிகள் மோதல்!
ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதா? – அண்ணாமலையை பொளந்துகட்டும் ஜெயக்குமார்
அமித் ஷா வந்தபோது ஏற்பட்ட மின்வெட்டு திட்டமிட்டதா?: செந்தில்பாலாஜி பதில்!
![Annamalai created a storm within AIADMK-BJP](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/White.jpg)