ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன் ராவ் மீது அரசு விசாரணைக்கு பரிந்துரை!   

அரசியல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 27ஆம் தேதி தனது அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் அந்த அறிக்கை மீது இன்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து  அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், 

” மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 22- 9 -2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும் அதைத் தொடர்ந்து 5 -12 -2016 அன்று அவரது மரணம் வரையிலும்,

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட மாண்புமிகு நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் 27- 8- 2022 அன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளபடி  வி .கே . சசிகலா,  சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் ராம் மோகன் ராவ்,

உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும்…

உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் அதற்கான விபர அறிக்கை உடன் ஆணையத்தின் அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது”என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை-ஸ்டாலினுக்கு துருப்புச் சீட்டா?

+1
2
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *