ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியான நிலையில் இன்று இரவு ஜெயலலிதா தோழியான சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று வெளியானது.
இதில் பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில், சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இன்று இரவு தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்துக்கு சென்றார் டிடிவி தினகரன். அங்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து இருவரும் பேசியிருக்கின்றனர்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரையை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் இருவரும் ஆலோசித்துள்ளனர்.
பிரியா
சட்டமன்றத்தில் அதிமுக ஆடிய சடுகுடு: வேடிக்கை பார்த்த திமுக!
துப்பாக்கிச் சூடு: சேலம் வரை சென்று சொல்லியும் கண்டுகொள்ளாத எடப்பாடி