ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல்!

Published On:

| By Kavi


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி இன்று தாக்கல் செய்தார்.

2016ல் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 75 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் 2017ல் அமைக்கப்பட்டது.

மொத்தம் 150 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. சசிகலா, பன்னீர் செல்வம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் விசாரணை அறிக்கையை இன்று (ஆகஸ்ட் 27) முன்னாள் நீதிபதி தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மரணம்: எய்ம்ஸ் மருத்துவக் குழு இறுதி அறிக்கை கூறுவது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share