முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த தேதியில் முரண்பாடு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்டது.
இதில் ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு 2016 டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜெயலலிதா இறந்த நேரம் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை கூறும் நிலையில் சாட்சியங்கள் டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3.50 மணி என்று கூறியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி: சபாநாயகர் விளக்கம்!
ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்!