|

மரத்தடியில் பிரியாணி : ஜெயக்குமாரின் மதுரை பயணம்!

அதிமுக மாநாட்டுக்கு மதுரை செல்லும் வழியில் மரத்தடியில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவருந்திய வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரையில் நாளை அதிமுக மாநாடு நடைபெறுகிறது, இதில் சென்னையிலிருந்து பங்கேற்க செல்லும் அதிமுக நிர்வாகிகள் ராயபுரத்தில் இருந்து பேருந்துகளில் இன்று காலை புறப்பட்டனர்.

இவர்கள் பயணத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஜெயக்குமாரும் கார் மூலம் சென்னையிலிருந்து மதுரை கிளம்பினார்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சென்றதும் காரை ஓரமாக நிறுத்த சொன்ன ஜெயக்குமார், அருகே இருந்த மரத்தடி நிழலில் அமர்ந்து உணவருந்தினார்.

பொன்னாடையைக் கீழே போட்டு இருவருடன் அமர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பிரியாணி சாப்பிட்டார். அதன் பிறகு மதுரை புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, எத்தனையோ நட்சத்திர உணவகங்களில் கிடைக்காத ஒரு சந்தோஷம் இது என்று ஜெயக்குமார் தெரிவித்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா

“திமுக ஆட்சியில் ஜாதி கலவரங்கள் அதிகரித்துள்ளது” – அண்ணாமலை

உத்தரப்பிரதேச துணை முதல்வருடன் ஜெயிலர் பார்த்த ரஜினி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts