உதயநிதி மதத்தை இழிவுபடுத்துவது சரியல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நாடாளுமன்ற தேர்தலுடன் , சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரும் என்ற நிலை தான் தற்போது உள்ளது. ஆளுங்கட்சி அராஜகத்தை மக்களிடம் எடுத்து சொல்வோம்.
அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் , பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் என அதிமுக கொண்டுவந்த திட்டங்களை செயல்படுத்தாமல் குழி தோண்டி புதைத்து விட்டனர். அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் திட்டங்களை நிறுத்தி விட்டனர். கோடிக்கணக்கில் கடன் வாங்கி உள்ளனர். மக்களுக்கு நன்மை செய்யாத மோசமான அரசு இந்தியாவில் திமுக தான். கடுமையான எதிர்ப்பு அலை திமுக விற்கு உள்ளது, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் ஒரே சமயத்தில் நடைபெற்ற போது ரூ.11 கோடி தான் செலவு. நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும் தற்போது ரூ.60 கோடி செலவாகிறது. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள எந்த சூழலிலும் அதிமுக தயாராக உள்ளது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன். எல்லோரும் ஓர் இனம் எல்லாம் ஓர் மொழி என்று அண்ணா எங்களை வழி நடத்தி சென்று உள்ளார். இளம் கன்று பயம் அறியாது. சனாதனம் என்றால் என்ன என்றே உதயநிதிக்கு தெரியாது. மதத்தை இழிவுபடுத்துவது சரி அல்ல. மனிதனை நல் வழிப்படுத்தும் நல்ல விஷயங்கள் மதத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஜி20 தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு!
“இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும்” – விஷால்
சனாதனம் பற்றி தெரியாத அரைவேக்காடு, அண்ணா எதனை எதிர்த்தார் என்று கூட தெரியாத முட்டாள். அண்ணா பெயரை எடுத்து விட்டு வேறேதும் பெயர் வைத்துக்கொள்