“ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை”: ஜெயக்குமார்

அரசியல்

ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பே இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக விதி மீறலில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் இன்று (பிப்ரவரி 7) புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “ஆளுங்கட்சியினர் பணத்தை வைத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.

தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயகத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கசாப்பு கடைக்காரர்களை ஆடுகள் நம்பினால் ஆடுகள் கதி என்னவாகும். அதுதான் ஓபிஎஸ் அவர்களை நம்பியவர்களுக்கு நடந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பே இல்லை.

திமுகவின் பி டீமாக செயல்பட்டு இரட்டை இலையை ஓ.பன்னீர் செல்வம் முடக்க முயற்சி செய்தார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் திமுகவை சார்ந்தே உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும்.” என்று தெரிவித்தார்.

செல்வம்

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு ஆய்வு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *