மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் இன்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் ஆடம்பரமாக வசதி உருவாக்கி கொடுத்துள்ளனர். இதுகுறித்து அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜியை நீக்கினால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும்.
திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. மணிப்பூர் சம்பவம் யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டிக்க ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா. தமிழகம் விரைவில் தண்ணீர் இல்லாத மாநிலமாக உருவாக போகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: அப்டேட் கொடுத்த படக்குழு!
‘டிடி ரிட்டர்ன்ஸ்’: சந்தானம் கான்ஃபிடன்ட்!