அமித்ஷா பஞ்சாயத்துக்கு பிறகும் தொடரும் அதிமுக – பாஜக புகைச்சல்!

அரசியல்

பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஏப்ரல் 28) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,

“பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபிறகு அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளோம்.

அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளோம். பிடிஆர் ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

பிடிஆர் ஆடியோ குறித்து முதல்வர் இதுவரை பேசவில்லை. திமுக அமைச்சர்கள் ஊழல் செய்து கோடிக்கணக்கான ரூபாய்களை சேர்த்து வைத்துள்ளார்கள். அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒளிபரப்பியபோது பாதியிலேயே நிறுத்தியதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஓ.பன்னீர் செல்வம் நடத்தியது மாநாடு அல்ல. பொதுக்கூட்டம் தான். எங்களுடைய கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் என்னையும் சி.வி.சண்முகத்தையும் ஒருமையில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விலைவாசி, சொத்து வரி, வீட்டு வரி உயர்ந்துள்ளது” என்றவரிடம்

தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அமித்ஷா சந்திப்பு குறித்து,

“தமிழகத்தில் எந்த முடிவையும் மலையே எடுப்பார் அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு உணர்த்திய அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா” என்று ட்வீட் செய்திருந்தார்.

எஸ்.ஆர்.சேகரின் இந்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம். அதிமுகவிற்கு எதிராக பேசுபவர்களை அண்ணாமலை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

பாஜக நிர்வாகிக்கு நேர்ந்த துயரம்: 9 பேர் சரண்!

பொன்னியின் செல்வன் 2: விமர்சனம்!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *