“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை” – ஜெயக்குமார்

அரசியல்

நடைபயணம் முடிவதற்குள் உடையும் கூட்டணி என்று டிஜிட்டல் திண்ணையில் நாம் நேற்று (செப்டம்பர் 17) செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ”அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசியபோது, “அண்ணாமலை ஜெயலலிதாவை விமர்சித்ததால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றினோம். பின்னர் ஜெயலலிதாவை நான் விமர்சிக்கவில்லை என்று மன்னிப்பு கேட்டார். நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடிய அண்ணாவை பற்றி சிறுமைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தோம்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் அளித்த பேட்டியில் பெரியார் அடி வாங்கியதை சொல்வேன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எப்படி பதவி வாங்கினார் தெரியுமா என்றெல்லாம் பேசியுள்ளார்.  கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? பலமுறை எச்சரிக்கை கொடுத்தோம். இனிமேல் அண்ணாமலையை அதிமுகவினர் கடுமையான விமர்சனம் செய்வோம்.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. பாஜகவை சுமக்க வேண்டிய நிலைமை அதிமுகவுக்கு கிடையாது.

தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது. எங்களை வைத்து தான் பாஜகவுக்கு அடையாளம். அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்தில் பலமுறை முறையிட்டோம். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இனி தேர்தல் வரும்போது தான் முடிவெடுக்க முடியும். இதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செல்வம்

அப்போ ’லவ் டுடே’… இப்போ ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’

நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப கதையில் ஜெயம் ரவி

 

 

 

+1
2
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *