மாஜி அமைச்சருக்கு எதிராக அரசு மேல்முறையீடு!

Published On:

| By Kavi

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று (ஜனவரி 30) மேல் முறையீடு செய்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில், ஜெயக்குமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

பிரியா

திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம்: ஹன்சிகா பேட்டி!

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment