அதிமுக தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க பாஜக வெட்கப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மார்ச் 3) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களை பாஜக பயன்படுத்துவது கீழ்த்தரமானது. அதிமுக தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க வெட்கப்பட வேண்டும். இது அவர்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது.
நேற்று திருச்சி மாநாட்டில் ஆட்களே இல்லாமல் காலி சேர்களிடம் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவே இல்லாத கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான்.
மோடி தமிழ்நாட்டுக்கு வருவதால் எந்த தாக்கமும் இல்லை. இந்த தேர்தலில் அவர்களின் வாக்கு சதவீதம் ஒரு சதவீதம் கூடுவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளது. பாஜகவினர் சமூக ஊடகங்களை மட்டுமே நம்பி அரசியல் செய்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான்.
பாஜக எங்களுடன் மிரட்டி கூட்டணி வைக்கும் அளவுக்கு அதிமுக என்ன குழந்தையா? அதிமுக ஒருபோதும் மிரட்டலுக்கு அஞ்சாது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை பொறுத்தவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடருவதா வேண்டாமா என்பது அவரது கட்சியின் நிலைப்பாடு. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. திமுக கூட்டணியில் 4 கட்சிகளுக்கு மட்டுமே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் கவலையில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி விசிட்: சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்?
சத்யராஜ் மகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா?