மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா இன்று டிசம்பர் 7ஆம் தேதி காலை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு கொழும்பு செல்லும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார் ஜவாஹிருல்லா.
இது பற்றி மனிதநேய மக்கள் கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது, “கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்த போது நபிகளாரின் சமூக உறவு என்ற புத்தகத்தை எழுதினார்.
இந்த புத்தகம் தமிழகத்தில் முறைப்படி வெளியிடப்படவில்லை என்றாலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு விஐபிகளுக்கும் இந்த புத்தகத்தை சந்திக்கும்போது கொடுத்துள்ளார் ஜவாஹிருல்லா.
இந்த வகையில் இப்புத்தகத்தை படித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபாரம் அமைப்பினர் கொழும்பில் ஒரு விழா நடத்தி இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று ஜவாஹிருல்லாவிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 9ஆம் தேதி நபிகளாரின் சமூக உறவு புத்தக வெளியீட்டு விழா ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபாரம் சார்பாக கொழும்பு மாவத்தை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்காக இன்று டிசம்பர் 7ஆம் தேதி காலை6 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்பு புறப்பட்டு சென்றுள்ளார் ஜவாஹிருல்லா.
கொழும்பில் இலங்கை தமிழர் கட்சி பிரதிநிதிகளையும் ஜவாஹிருல்லா சந்திக்க வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்கள்.
அண்மையில் ஜவாஹிருல்லா ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
வேந்தன்
மின் இணைப்புடன் ஆதார்: வழக்கு நாளை ஒத்திவைப்பு!
எம்.எல்.ஏ.க்களை அலைக்கழித்த கலெக்டர்!
அருமையான புத்தகம் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்