மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, “மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மறைமலை நகரில் சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது.
பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் தான் இந்த மாநாட்டிற்கு சமூக நீதி மாநாடு என்று பெயரிட்டுள்ளோம்” என்றார்.
ஆவடி நாசர் அமைச்சரவை பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“தன்னுடைய அமைச்சரவையில் யாரை அமைச்சராக்க வேண்டும் என்ற அதிகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் உள்ளது.
கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு அமைச்சரவையில் உபயதுல்லா மற்றும் டிபிஎம் மைதீன் கான் ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருந்தார்கள். அதே வழியில் தான் தமிழகத்தில் நாசர் மற்றும் மஸ்தான் ஆகிய இருவர் அமைச்சர்களாக இருந்தனர்.
நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கலைஞர் வழியில் தமிழக அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
செல்வம்
தாயின் அன்புக்கு வயது இல்லை: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
விஜய்யுடன் இணையும் வெங்கட் பிரபு?