தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் நேற்று (நவம்பர் 4) எஸ்.எஸ். மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழகத்தில் 68 அமைப்பு மாவட்டங்களில் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட 430 தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் தலைமை நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக ப.அப்துல் சமது எம்.எல்.ஏ.,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளராக பொறியாளர் திருச்சி ஷபியுள்ளா கான், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளராக கோவை இ.உமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டியின்றி இவர்கள் தேர்வு செய்யப்பட்டதை கட்சி இன்று (நவம்பர் 5) தெரிவித்துள்ளது.
.ஜெ.பிரகாஷ்