|

ஜம்மு – காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

ஜம்மு காஷ்மீரில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளில் இன்று (செப்டம்பர் 25) இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 61.13 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

இந்தநிலையில், 26 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட  வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் 20.75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

26 தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா வேட்பாளராக போட்டியிடும் காந்தர்பால், பட்கம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா போட்டியிடும் நெளஷரா தொகுதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தரிக் ஹமீத் காரா போட்டியிடும் மத்திய ஷால்டாங் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவானது அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது, இதனை தொடர்ந்து அக்டோபர் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“களரி பயிற்சிக்கு குமரியில் தனி ஆராய்ச்சி மையம்” – மனோ தங்கராஜ் தகவல்!

டாப் 10 நியூஸ்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முதல் ‘கேம் சேஞ்சர்’ அப்டேட் வரை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts