மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜனவரி 6) நடைபெற்றது. இதில் கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியதற்கு முக்கிய அம்சம் என்னவென்றால், அவர்கள் எல்லாரும் ஒரு குரல் கேட்டதும் திரண்டு டெல்லிக்கு வந்து பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டனர்.
இது முதற்கட்டம் தான். பாரதத்தின் இழந்த மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. கட்சிக்கு அப்பாற்பட்ட யாத்திரை இது.
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. அதற்கு அனுமதி பெற முயன்று வருகிறோம். அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
சென்னையில் ஜல்லிக்கட்டை ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், “சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் உங்களுக்கு மறந்துபோய் இருக்கலாம். எனக்கு மறக்கவில்லை. அதே இடத்தில் நடத்த முடியாது. அதில் சட்ட சிக்கல்கள் ஏற்படும்.
நகரத்தில் இருப்பவர்களுக்கு ஜல்லிக்கட்டின் அருமை பெருமைகளைப் புரிய வைக்க வேண்டும்” என்று கூறினார்.
மோனிஷா
புதுக்கோட்டை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்?-சீமான்
வாரிசு, துணிவு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!