பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராடுவோம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜனவரி 28) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்து முதல்வராக பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. ஆங்காங்கே சில ஸ்பீட் பிரேக்கர்கள் உள்ளன. இருப்பினும், பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி 18 எதிர்க்கட்சிகளுக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்து, முதல் கூட்டத்தை பிகாரில் நடத்தினார். இரண்டாவது கூட்டம் ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. பின்னர் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் கூட்டம் நடைபெற்றது. இந்த மூன்று கூட்டங்களிலும் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார்.
எனவே, பாஜக மற்றும் அதன் சித்தாந்தத்தை கடைசி வரை நிதிஷ்குமார் எதிர்த்து போராடுவார் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…