சிறை தண்டனை : ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Published On:

| By Kavi

rahul gandhi case

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன் மீதான அவதூறு வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் பற்றிப் பேசியிருந்தார்.

அப்போது “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது,

இந்நிலையில் சூரத் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து.

இந்தச்சூழலில் குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தற்போது ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கோரியுள்ளார் ராகுல் காந்தி.

பிரியா

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்: முதல்வர் திறந்து வைத்தார்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற தமிழக வீரர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel