Jail sentence for Minister Ponmudi

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை, 50 லட்சம் அபராதம்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல்

Jail sentence for Minister Ponmudi

அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.7 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோரை 2016-ஆம் ஆண்டு விடுதலை செய்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.சுந்திரமூர்த்தி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 19-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,

சிறப்பு நீதிமன்ற விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து உத்தரவிட்டார்.

மேலும், தண்டனை விவரங்கள் இன்று (டிசம்பர் 21) அறிவிக்கப்படும் போது பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரிலோ அல்லது காணொலி காட்சி வாயிலாகவோ ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்திலிருந்து காலை 9.15 மணிக்கு காரில் புறப்பட்டனர். அவர்கள் பயணித்த காரில் தேசியக்கொடி பொருத்தப்படவில்லை.

இதனை தொடர்ந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற அறையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக காத்திருந்தனர்.

நீதிபதி ஜெயச்சந்திரன் காலை 10.39 மணிக்கு தனது நீதிமன்ற சேம்பருக்கு வந்தார். அப்போது பொன்முடியும் அவரது மனைவியும் அவர் முன் ஆஜரானார்கள். வழக்கறிஞர்கள் அதிகமாக திரண்டிருந்தார்கள். ‘அவர்களுக்கு வழி விடுங்கள்’ என்று வழக்கறிஞர்களைப் பார்த்து நீதிபதி கூறினார்.

இருவரும் தங்களது மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள். பொன்முடிக்கு 73 வயது ஆகிறது. அவரது மனைவி விசாலாட்சிக்கு 60 வயது ஆகிறது. மேலும் இது மிகவும் பழைய வழக்கு. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்தார்.

அதன் பின்  பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்று  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.  அபராதத் தொகையாக இருவரும் தலா ரூ.50 லட்சம்  செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பொன்முடி தற்போது அமைச்சராக இருப்பதால்  தண்டனையை  30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் திறக்கப்படும் சென்னை ஃபோர்டு நிறுவனம்?  

உச்சநீதிமன்ற தொடர் விடுமுறை: பொன்முடி மேல்முறையீட்டில் தாமதமா?

பொன்முடி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்!

தூத்துக்குடியில் பேருந்து சேவைகள் மீண்டும் துவக்கம்!

Jail sentence for Minister Ponmudi

+1
0
+1
1
+1
0
+1
3
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *