jagathrakshakan places it raid

ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐடி சோதனை!

அரசியல்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று (அக்டோபர் 6) சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் கல்வி நிறுவனம், மருத்துவமனை, மது ஆலைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் ஜெகத்ரட்சனின் சென்னை அடையாறு வீடு, பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, சேலையூர் பாரத் மருத்துவ கல்லூரி, கொளப்பாக்கம் பாலாஜி பாலிடெக்னிக், மாமல்லபுரத்தில் உள்ள கால்டன் சமுத்ரா நட்சத்திர விடுதி, அண்ணா நகர் பரணி பில்டர்ஸ், புதுச்சேரி அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ லெட்சுமி நாராயணா கல்லூரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுவது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் என்றும் எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை பார்த்து பாஜக அரசு பயப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்தநிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ராகி வெங்காய தோசை

திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

ஐசிசி உலகக் கோப்பை: கான்வே – ரச்சின் படைத்த சாதனைகள்!

உங்கள் குரலுக்கு நான் அடிமை… வாய்ஸ் கன்ட்ரோலில் புதிய ஸ்மார்ட் டிவி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

1 thought on “ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐடி சோதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *