டெல்லி போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (பிப்ரவரி 25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்துள்ளார்.
இதனால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெண்களுக்கு அதிகாரமளிப்பதை வலியுறுத்திய ’மகளிர் மட்டும்’!
நாகை, திருச்சி உள்பட 6 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்