குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (நவம்பர் 10) வெளியிட்டது. அதில் ஜடேஜாவின் மனைவி, ரிவாபாவை ஜாம்நகர் வடக்கு தொகுதியின் வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.
குஜராத்தில் வரும் டிசம்பர் 1மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஆளும் கட்சியான பாஜக மேலிடம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இறங்கியது.
இதற்கான உத்தேச வேட்பாளர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத்தில் 160 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
அதில் எதிர்பார்த்தபடியே ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள ரிவாபா, 2016-ம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வருகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ஹரி சிங் சோலங்கியின் குடும்பத்தை சேர்ந்தவர் ரிவாபா. எனினும் பாஜகவில் சேர்ந்து அதன் அங்கமான கர்னி சேனாவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் அவர் விரும்பியபடியே குஜராத் தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளராக களமிறக்கியுள்ளது பாஜக.
கிறிஸ்டோபர் ஜெமா
மழைநீர் வடிகால் : பணிக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்!
“நாங்க வந்துட்டோம்… நீங்க எப்படி?”: அக்தர்