ஜெ. தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் இருவரும் தங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ளவுள்ளதாகப் பரவி வந்த செய்திக்கு மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா மற்றும் அவரது கணவர் மாதவனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், மாதவன் விவாகரத்து கேட்டு தீபாவுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தனது வாட்ஸ் அப்பிலும், என் கணவர் விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்கிறார். எனக்கு உதவ யாரும் இல்லை என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக ஆனந்த விகடனுக்கு தீபா பேட்டி அளித்திருந்தார்.
இந்த குற்றசாட்டு தொடர்பாக மாதவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
“தீபா என்னைப் பற்றி அளித்த புகார்கள் அனைத்தையும் மறுக்கிறேன். தீபாவை அன்றுபோல் இன்றும் நேசிக்கிறேன். அதில் எள்ளளவும் மாற்றமில்லை.
தீபாவின் உடல்நிலையில் எனக்கு முழு அக்கறை இருக்கிறது. தீபாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழுமையாகக் கவனித்துக் கொள்கிறேன்.
தற்போது மருத்துவச் சிகிச்சையில் தீபா இருக்கிறார். அவர் எடுத்துக் கொள்ளும் மருந்தின் தாக்கம் அவருக்குள் இருக்கிறது.
அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மோனிஷா