ஜம்மு காஷ்மீருக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(அக்டோபர் 8) நடைபெற்று வருகிற நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் இல்திஜா முஃப்தி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஸ்ரிகுஃவாரா-பிஜ்பெஹரா தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தியின் மகளான இல்திஜா முஃப்தி போட்டியிட்டார். இவருக்கு எதிராகத் தேசிய மாநாடு கட்சியின் சார்பாக பஷீர் அஹ்மத் ஷா வீரியும், பாஜக சார்பாக சோஃபி யூசிஃபும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் 11ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 8,758 வாக்கு வித்தியாசத்தில் இல்திஜா முஃப்தி அஹ்மத் ஷா வீரியை விட பின்தங்கியுள்ளார். இன்னும் ஒரு சுற்று மீதம் இருக்கும் நிலையில் அவரது தோல்வி உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் இல்திஜா முஃப்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன். பிஜ்பெஹாராவில் உள்ள அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பும் பாசமும் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த தேர்தல் பிரச்சாரம் முழுவதும் கடுமையாக உழைத்த எனது பிடிபி ஊழியர்களுக்கு எனது நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
இதில் கவனத்திற்குரிய விஷயம் என்னவென்றால், ஸ்ரிகுஃவாரா-பிஜ்பெஹரா தொகுதியானது மக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டையாகும். 1999ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்ற நான்கு தேர்தல்களிலும் அக்கட்சி தான் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சியின் தலைவரான மெஹபூபா முஃப்தி மகளே தோற்றுப்போனது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணம் ரொம்ப அதிகம்” : அன்புமணி
நடிகர் யோகிபாபு சொல்றதை கேளுங்க… உங்க பணம் பாதுகாப்பாக இருக்கும்!