துபாய் டூ சென்னை: மக்களவை தேர்தலுக்காக ரூ.200 கோடி ஹவாலா பணம்!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற தேர்தலுக்காக துபாயிலிருந்து ரூ.200 கோடி ஹவாலா பணத்தை தமிழ்நாட்டிற்கு கடத்த திட்டமிட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், ஐடி, இடி, தேர்தல் பறக்கும் படை சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக, திமுக தொடர்புடைய காண்ட்ராக்டர்கள் வீடுகள், ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல், பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் ரூ.32 கோடி பறிமுதல் என ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் அதிகளவில் பணம் கைப்பற்றப்படுகிறது.

இந்தநிலையில், துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை கடத்த திட்டமிட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

இதுகுறித்து வருவான வரித்துறை வட்டாரங்கள் கூறும்போது,

“துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பணப்பரிமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார் ஜோசப்பிடம் விசாரணை மேற்கொண்டோம்.

அவர் துபாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமான பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் ஹவாலா ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்தது.

மேலும், அவரது செல்போன், வாட்ஸப் சேட், லேப்டாப்பை ஆய்வு செய்ததில், துபாயை சேர்ந்த செல்வம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த அப்பு என்கிற விநாயகர் வேலன் ஆகியோர் உதவியுடன் முக்கிய அரசியல் கட்சிக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது

மேலும், இந்த ஹவாலா பணப்பரிமாற்றத்தில், துபாயை சேர்ந்த மோனிகா விரோலா, மலேசியாவை சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து வினோத் குமார் ஜோசப்பிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சேலம் பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் ஐடி ரெய்டு: நிர்வாகிகள் வாக்குவாதம்!

தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ள 10 புதிய ரயில்கள் எவை, எவை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share