மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று (மே 26) காலை முதல் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர்.
மேலும் செந்தில் பாலாஜியை அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் சென்னையில் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இம்ரான் கான், அவரது மனைவி உட்பட 80 பேர் நாட்டை விட்டு வெளியேற தடை!
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து: காரணம் என்ன?