அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு!

Published On:

| By Kavi

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (நவம்பர் 3) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, அருணை கிரானைட் என அமைச்சர்.எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் எ.வ.வேலு வீடுகள், அலுவலகம் உட்பட 40 இடங்களில் சுமார் 160 அதிகாரிகள் காலை 6.00 முதல் ரெய்டு நடத்தி  வருகின்றனர்.

சென்னையில் கீழ்பாக்கம், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது, திருவவண்ணாமலையில்  ஐ.டி சோதனை நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share