தமிழ்நாட்டில் 44 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று திமுக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் அலுவலகத்தில் ஐடி துறை சோதனை நடத்தியது.
இன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
சென்னை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சியின் 8 முன்னணி ஒப்பந்ததாரர்களுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியார் ரெடிமிக்ஸ், கட்டுமான நிறுவனத்திலும், சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘ரொம்ப க்யூட்’… ரசிகர்களின் வாழ்த்துமழையில் நனையும் அமலாபால்!
அமலாக்கத் துறை வழக்கு ரத்து: தனியார் கட்டுமான நிறுவன வழக்கில் முக்கிய உத்தரவு!