புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டித்துரை எடுத்திருந்தார். இவர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஆவார்.
சாலையில் பெயர்ப் பலகை வைக்கக் கூடிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களை இவர் கடந்த காலங்களில் எடுத்திருந்தார்.
இந்த சூழலில் தரமில்லாத பொருட்கள் மூலம் பணிகளை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாகவும் பாண்டித்துரை மீது புகார் எழுந்தது.
அதனடிப்படையில், இன்று (அக்டோபர் 12) காலை 2 கார்களில் பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரை அலுவலகத்துக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
‘என் மீது எப்போதும் அன்பு வைத்திருந்தவர் கோவை தங்கம்’: முதல்வர் இரங்கல்!
’பொன்னியின் செல்வன்’ – ’நானே வருவேன்’: அள்ளிக் கொண்ட அமேசான்