எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஐடி… எங்கெங்கு சோதனை?
சென்னை, திருவண்ணாமலை, கோவை என பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களுக்கு காலை 5.30 மணிக்கு வந்த ஐடி அதிகாரிகள், அனைத்து இடங்களிலும் காலை 6 மணிக்கு சோதனையை தொடங்கினர்.
எ.வ. வேலுவின் சொந்த ஊரான திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி, அருணை கிரானைட் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து வருகிறது.
சென்னை, திருவண்ணாமலை, கோவை என மொத்தம் 40 இடங்களில் எ.வ.வேலுவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
https://twitter.com/i/status/1720271339943276597
கோவையில் ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. 3 வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுபோன்று எ.வ.வேலுவின் ஆதரவாளர் என கூறப்படும் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.சாமி இல்லத்தில் சோதனை நடந்து வருகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திலும் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்று அப்பாசாமி கட்டுமான நிறுவந்த்திலும் சோதனை நடக்கிறது.
புரசைவாக்கம் பிரக்லின் சாலையில் உள்ள டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்பில் 4ஆவது தளத்தில் வசித்து வரும் அமித் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இவர் பொதுப்பணித் துறைக்கு பொருட்களை விநியோகித்து வருபவர் என கூறப்படுகிறது.
https://twitter.com/i/status/1720273716805009476
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை நடக்கிறது.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் ஜெகரட்சகன் எம்.பி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
எடப்பாடி வீட்டிலும் ரெய்டு ? முதலில் வந்த உத்தரவு!
லால் சலாம் ஆடியோ லாஞ்ச்: ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலா?