அன்புமணியை தலைவர் ஆக்கியது ஏன்? : ராமதாஸ் தன்னிடம் கூறியதை பகிர்ந்த சீமான்

Published On:

| By christopher

சாட்டையால் அடித்துக்கொண்டு அண்ணாமலை தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது என குறித்து சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (டிசம்பர் 29) செய்தியாளர்களை சந்தித்தார்.

கட்சியில் முரண்பாடுகள் வரும்!

அப்போது அவர் பேசுகையில், “என்னால் பாமகவின் உள்கட்சி மோதலில் கருத்து சொல்ல முடியாது. ராமதாஸ், அன்புமணி இரண்டு பேரும் என் மதிப்பிற்குரியவர்கள்.

ஒரு கட்சியை வழிநடத்தும்போது இது போன்ற பிரச்சனைகள், முரண்பாடுகள் வரும். பின்னர் அது சரியாகிவிடும்.

பாமகவில் தலைவர் பதவியை வேறு சிலருக்கு கொடுத்துவிட்டு, அது சரியாக வராததால் தான் அன்புமணிக்கு கொடுத்ததாக ராமதாஸ் என்னிடம் கூறினார்.

படம் எடுத்தால் இப்போது தலைவர் என்று பெயர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் தலைவருக்கு பல தகுதி உள்ளது. 140க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மேல் உள்ளது. என் கால் படாத நீதிமன்ற வாசல்களே இல்லை.

தேர்தல் அரசியல் தான் உள்ளது!

தமிழ்நாட்டில் மக்களுக்கான அரசியல் இல்லை. கட்சி அரசியல், தேர்தல் அரசியல்தான் இங்கு உள்ளது.

திமுக செய்வது மக்கள் அரசியலா? கோயில், மதம், சாமியை தவிர வேறு எதையாவது பாஜக இந்த 15 ஆண்டுகளில் பேசியுள்ளதா? சமீபத்தில் இறந்த பாஷாவை வைத்து ஒருவாரம் தொடர்ந்து பேசினார்கள்.

தேர்தல் நேரத்தில் தான் டைடல் பார்க் திறக்க போறேன். 1000 ரூபாய் புதுமை பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறேன் என்று சொல்கிறேன். தேர்தலில் ஜெயிப்பதற்காக 5 வருடம் கழித்துதான் மக்களிடம் கள ஆய்வுக்கு வந்து என்ன பிரச்சனை என்று கேட்பார்கள். கள ஆய்வுக்கு செல்வதை விட, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நில ஆய்வு சென்றால் நன்றாக இருக்கும்.

சாட்டையடி தேவையற்றது!

அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவருக்குள் இருக்கும் கோபம் எல்லோருக்குள்ளும் இருப்பது தான். எனக்கும் அத்தகைய கோபம் இருக்கிறது. அவரது உணர்வை அவ்வாறு வெளிக்காட்டியுள்ளார். அதனை விமர்சிக்கக்கூடாது.

அதற்காக சாட்டையில் அடித்துக்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்யும் குற்றவாளிகளையும், அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும்.

வாக்குக்கு ஏன் ரூ.500, ரூ.1000 கொடுக்க வேண்டும்? யார் ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுக்கிறாரோ, அவர் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என்ற சட்டத்தை போட்டால் ஒருவரும் தேர்தலுக்கு பணம் தரமாட்டார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எப்படி நடக்கிறது என்று பார்ப்போமா? அங்கு மக்களை மந்தை மந்தையாக அடைத்து வைத்து காசு, பிரியாணி கொடுப்பார்கள். வாக்குக்கு காசு கொடுக்காமல் தடுப்பதை விட்டுவிட்டு செருப்பில்லாமல் இல்லை, காலில்லாமல் நடந்தால் கூட பயனில்லை. இதனை தான் அண்ணாமலை ஒழிக்க வேண்டும்.” என்று

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தென் கொரியாவின் 2வது பெரிய விமான விபத்து : பலி எண்ணிக்கை 174 ஆக உயர்வு!

தூத்துக்குடியில் ஸ்டாலின் : உற்சாக வரவேற்பு!

ராமதாஸுடன் மோதல்… பொதுக்குழுவில் விவாதம் நடப்பது சகஜம் – அன்புமணி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel