வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு புகார் கொடுத்தால் பயந்து ஒடிவிடுவோம் என்று நினைக்க வேண்டாம் என வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது திமுகவினரால் தாக்கப்பட்டனர்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதிகாரிகள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அவர்களை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குனர் சிவசங்கரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கரன், “கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்.
8 பேரை கைது செய்திருக்கிறார்கள். காவல்துறையினரிடம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேலும் புகார் அளிக்க உள்ளோம்.
தாக்குதல் நடத்தியவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது புகார் கொடுத்தால் பயந்து ஓடிவிடுவோம் என நினைக்க வேண்டாம்” என்று சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
வெளுத்து வாங்கும் மழை: ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா?
டிஜிட்டல் திண்ணை: ரெய்டுக்கு முன் வந்த போன் கால்…டென்ஷன் உதயநிதி, ரிலாக்ஸ் செந்தில்பாலாஜி