“எடப்பாடி – எஸ்.பி.வேலுமணி இடையே பிரச்சினை”: அண்ணாமலை பேட்டி!

Published On:

| By Kavi

எஸ்.பி.வேலுமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்சினை போல் தெரிகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “2019ல் 19.3சதவிகித வாக்குகள் தான் அதிமுக வாங்கியிருந்தது. இன்றைக்கு 20.46 சதவிகித வாக்குகள் வாங்கியிருக்கிறது. கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறோம்.

அண்ணாமலை கொஞ்சம் அதிகமாகவே பேசியிருக்கிறார். இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் அதிகமாக பேசுகிறார்கள் என்று பேசியிருக்கிறார்.

பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் இருந்த போது அதிமுக – பாஜக கூட்டணி நன்றாகத்தான் இருந்தது. இவர் வந்த பிறகுதான் பிளவு ஏற்பட்டது. அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என எல்லா தலைவர்களையும் பற்றி பேசினார்.

இன்று கூட்டணி பிளவு ஏற்பட்டதற்கு அண்ணாமலை தான் காரணம். பாஜக – அதிமுக கூட்டணியிலிருந்திருந்தால் 35 இடங்கள் வரை வென்றிருப்போம். அண்ணாமலைதான் பிரச்சினை” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “கூட்டணியில் இருந்த போது நிர்பந்தம் காரணமாக சில சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தோம் என்று அதிமுக தலைவர்கள் சொன்னார்களே.

பாஜகவுடனான கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு, இந்த சமுதாய வாக்குகள் எல்லாம் வரும் என்று சொன்னார்களே.

தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருந்தால் 35 இடங்களில் வந்திருப்போம் என்று சொல்கிறார்கள்.

இப்போது வேலுமணி பேசியிருப்பதை பார்க்கும் போது, வேலுமணிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏதோ பிரச்சினை போல் எனக்கு தெரிகிறது. பிரச்சினை ஆரம்பித்திருப்பது போலத்தான் நான் பார்க்கிறேன்.

2019ல் அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போதுகூட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. இப்போது பல இடங்களில் டெபாசிட்டை இழந்திருக்கிறார்கள்.
மக்கள் அதிமுகவினரை நிராகரித்துவிட்டனர் என்பதுதான் இந்த தேர்தலின் செய்தியே. சந்தர்ப்பவாத கட்சி. கூட்டணியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாதபோது ஒரு பேச்சு பேசுகின்றனர்.

கோவையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் 6 தொகுதிகளில் 3 இடத்தில் டெபாசிட் இழந்திருக்கிறார்கள்.

இந்த விரக்தியில் எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அண்ணாமலை தோல்வி: மொட்டையடித்த பாஜக தொண்டர்!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் குட் நியூஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel