இலங்கையின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்த்தன?

அரசியல்

இலங்கையின் புதிய பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தன இன்று (ஜூலை 22) பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், அதிபராக இருந்த அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து கடந்த 20ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபர் தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 134 உறுப்பினர்களின் வாக்குகளோடு இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து நேற்று இலங்கையின் 9வது அதிபராக அவர் பதவியேற்றார்.

இந்நிலையில் இலங்கையின் அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழுந்தது. பிரதமர் பதவி குறித்து அனைத்துக்கட்சியின் ஆதரவு குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. அதேவேளையில் அந்நாட்டு அரசியலமைப்பின்படி பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. அதன்படி நாட்டில் நிலவும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன இன்று பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் ராஜபக்‌ஷேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 1983ம் ஆண்டு முதல்முறையாக எம்பியாக இவர் தேர்வு செய்யப்பட்டார். 10 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள தினேஷ், இதுவரை 8 முறை வெற்றி பெற்றுள்ளார்.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க, தனக்கு கீழ் பணியாற்றுவதற்கு 20-25 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரைவையை இன்று நியமிக்க உள்ளார். அவ்வகையில் இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தன, அதிபரால் நியமனம் செய்யப்பட்டு இன்று பதவியேற்பார் என இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொருளாதார சூழல் கடுமையாக அடி வாங்கியுள்ளது. தொடர்ந்து அதிபராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க மற்றும் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான புதிய அரசு, அந்நாட்டை மீண்டும் பொருளாதார சமநிலைக்கு மீட்டுகொண்டு வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *