சிறையில் இருக்கும் அமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டால் ரகசியத்தை எல்லாம் உடைத்துவிடுவார் என்று மு.க.ஸ்டாலின் மறுக்கிறார் என அமித் ஷா கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) என் மண் என் மக்கள் துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார்.
அப்போது செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் இப்போது நடக்கிற அரசாங்கம் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருக்கிறது. உலகிலேயே ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருக்கிறது.
உங்களுடைய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் ஊழல் வழக்கில் சிக்கி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருக்கிறார். ஆனால் அவரை அமைச்சராகத் தொடர வைத்திருக்கிறீர்கள். இது வெட்கக்கேடானது” என்று முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பேசினார்.
சிறையில் இருப்பவர் அமைச்சராக இருக்கலாமா, அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டுமா இல்லையா என்று கேள்வி எழுப்பிய அமித் ஷா, “ஸ்டாலின் அவரது (செந்தில் பாலாஜி) ராஜினாமா கடிதத்தை வாங்கமாட்டார். அப்படி வாங்கிவிட்டார் என்றால் அவர் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார். இதனால் தான் ராஜினாமா கடிதத்தைப் பெற ஸ்டாலின் மறுக்கிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டால் உங்கள் ஆட்சியில் பூகம்பம் ஏற்படுகிறது. அவர்கள் பல கோடி ரூபாயில் செய்த ஊழல் இப்போது அம்பலமாகியிருக்கிறது.
இந்த ஒரு ட்வீட்டுக்கே திமுக ஆட்சிக்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றால், அண்ணாமலை 10 ஆயிரம் கிமீ நடக்கப் போகிறார். அப்படி என்றால் உங்கள் நிலை என்னாவகும் என்று நினைத்துப் பாருங்கள்.
இந்த அரசு மின்பகிர்மான கழகத்தில் ஊழல் செய்திருக்கிறது. ஏழை மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் அரசு. திமுக தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது?,
திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஊழல் செய்து வருகிறது” என்று திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் அமித்ஷா.
பிரியா
‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா: ரசிகர்கள் கொண்டாட்டம்!
“தமிழகத்தின் பெருமையை உலக அரங்கிற்கு மோடி கொண்டு சென்றுள்ளார்” – அண்ணாமலை
ஜி, நீங்க குஜராத்ல மந்திரியா இருந்தபோது, கொஞ்ச காலம் சிறையிலும் இருந்தீங்க. அப்ப உங்க முதல்வரு மோடிஜி பதவி நீக்கம் பண்ணாமலேயே இருந்தாரே…?
ஜி, நீங்க குஜராத்ல மந்திரியா இருந்தபோது, கொஞ்ச காலம் சிறையிலும் இருந்தீங்க. அப்ப உங்க முதல்வரு மோடிஜி பதவி நீக்கம் பண்ணாமலேயே இருந்தாரே…?