போலீசார் சம்மன்: ஆஜராக மறுக்கும் சீமான்?

வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், சீமான் இன்று (செப்டம்பர் 9) நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில், நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் சீமான் இன்று நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்றும், வேறொரு நாளில் (செப்டம்பர் 12) ஆஜராகலாமா என்பது குறித்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவரது கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

விஜயலட்சுமி புகார்: ’நாம் தமிழர்’ சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி கைது!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts