பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்த போது, தான் வராதது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிக்காகச் சென்னை வந்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் இல்லை. கர்நாடக தேர்தலையொட்டி வேட்பாளர் தேர்வுக்காக டெல்லிக்குச் சென்றிருந்தார். பிரதமர் வருகையின் போது அவர் சார்ந்த மாநில கட்சியின் தலைவர் ஏன் இங்கு இல்லை என கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக இன்று (ஏப்ரல் 14) பாஜக தலைமை அலுவலகத்தில் பேசியுள்ள அண்ணாமலை, “பிரதமர் இங்கு வந்தார். அவரே என்னை போனில் தொடர்பு கொண்டு நீ இங்கே வராதே. உனக்கு கொடுத்திருக்கக் கூடிய பணி கர்நாடக பணி. அதை சிறப்பாக செய்ய வேண்டும். 6,7 நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அதனால் வராதே என்றார்.
ஆனால் திமுக மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் ஒரே லெட்டரை வெளியிட்டார்கள். அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டார்கள். அண்ணாமலை மீது மோடிக்குக் கோபம். மோடி அண்ணாமலை கண்களைப் பார்க்கமாட்டார் என்றெல்லாம் சொன்னார்கள்.
பிரதமர் மோடியை தமிழகத்துக்கு வந்து வரிசையில் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. பிரதமருக்கும் இல்லை. அதை அவரும் விரும்பமாட்டார்.
பிரதமரை ஒருமுறையாவது நேரில் பார்க்க முடியாதா என ஏங்குபவர்களுக்கு என்னுடைய இடத்தை கொடுப்பவன் நான். எதற்கும் துணிந்துதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என்றார்.
பிரியா
ரூ.200 கோடி லஞ்சம்: மு.க.ஸ்டாலின் மீது சிபிஐயில் புகாரளிக்கும் அண்ணாமலை
ரூ.200 கோடி லஞ்சம்: மு.க.ஸ்டாலின் மீது சிபிஐயில் புகாரளிக்கும் அண்ணாமலை