பொங்கலுக்கு முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை இன்று (டிசம்பர் 15) காலை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் இருவரும் நேரில் ஆய்வு செய்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்த பணியைத் தரமாக எவ்வளவு வேகமாகச் செய்து முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செய்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறோம்.
88 ஏக்கர் பரப்பளவில் தயாராகி வரும் இந்த பேருந்து நிலையத்தில் மாநகர, விரைவு, ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளைப் பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம். குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்க முடியாது.
கோயம்பேடு, கிளாம்பாக்கத்தை தவிர சென்னைக்கு இன்னும் 2 பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
பிரியா
திருப்பதியில் ரஜினி சாமி தரிசனம்!
காசியில் கச்சேரி : வாய்ப்பை பெற்ற முதல் தமிழர்!