sasikala

சண்டையிட்டு கொண்டேயிருந்தால் போதுமா? – சசிகலா

அரசியல்

ஆளுநரிடம் சண்டையிட்டு கொண்டே இருந்தால், மக்களுக்கு திமுக எவ்வாறு நன்மை செய்ய முடியும் என்று சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில்  எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு விகே.சசிகலா தூவி மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விகே.சசிகலாவிடம் ஆளுநர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும்.

அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால் அவர்களே செய்து அனுப்புவார்கள். அதன் பின்பு இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும் அதை பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும்.

ஆனால் இவர்கள் ஒரு முறை அனுப்பினார்களா அல்லது எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை, ஆகவே இது குறித்து உள்ளே சென்று கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை.

ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்று அணுகுமுறை உள்ளது. அதைப்போல தமிழக ஆளுநரையும் அரசு நடத்த வேண்டும். ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால் ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும் என்றார்.

மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது குறித்துப் பேசிய சசிகலா, ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு மாநிலத்தை வைத்து மட்டும் சொல்லிவிட முடியாது.

அனைத்து மாநிலங்களும் சேர்ந்து எடுக்கும் முடிவில் அதிக பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் அதை செய்து கொள்ள முடியும். தனிப்பட்ட ஒருவர் இதை செய்ய முடியாது என்று பதிலளித்தார்.

மேலும், இபிஎஸ் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசிகலா இணைப்பு குறித்து ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் பாதத்தில் சமர்ப்பிப்போம்.

அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். அரசியல் தவிர தமிழ்நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் திமுகவினர் தலையிடுவது வாடிக்கையாகியுள்ளது.

எங்கள் கட்சிக்காரர்களை சந்திப்பதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தேர்தல் வர உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்திக்க திட்டம் உள்ளது . விரைவில் உங்கள் அனைவரிடமும் தெரிவித்து விட்டு தான் சந்திப்பேன் என்றார்.

கலை.ரா

புதுக்கோட்டை சம்பவம்: தமிழக காவல்துறைக்கு சீமான் கேள்வி!

எம்ஜிஆர் பிறந்தநாள்: உறுதிமொழி எடுத்த எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *