அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது போலி என்று கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜனவரி 22) கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி உட்பட நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், துறவிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
முதலாளி விசுவாசத்தை காட்ட
மூட்டுவலியை கூட பொறுத்துக் கொண்டு தவழ்ந்தே அயோத்தி சென்ற எடப்பாடியோவ் என்னய்யா இது#குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு pic.twitter.com/Tkpf1stx3c
— EVERYTHING TO EVERYONE (@thinkkall) January 22, 2024
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்துகொள்வேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அவரும் இன்றைய ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றதாக ஒரு புகைப்படத்தை சமூகவலைதளங்களில் திமுகவினர் பதிவிட்டு விமர்சித்து வந்தனர்.
ஆனால் அந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்று கண்டறியப்பட்டது. அயோத்தி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு பதிலாக, அந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி படத்தை வைத்து போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் நடைபெற்ற 4ஆம் நாள் தை திருவிழாவில் கலந்துகொண்டார்.
மேலும் அங்கிருந்த அய்யா வழி பக்தர்களுடன் சேர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் சட்டையை கழற்றிக்கொண்டு, உருமா கட்டி, தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றி கோயிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் இந்த ஆண்டுக்கான தைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Video: நிச்சயதார்த்த விழாவில் செம என்ஜாய்… வைரலாகும் சாய் பல்லவி டான்ஸ்!
”தமிழ் திரையுலகில் அசிங்கப்படுத்துகிறார்கள்” : வேல ராமமூர்த்தி வேதனை!