தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை கட்சி நிர்வாக ரீதியாக ஒரு ஒன்றியத்தை அதிகபட்சமாக நான்காக பிரித்து, நான்கு ஒன்றிய செயலாளர்களை ஏற்கனவே நியமித்தது திமுக தலைமை. ஒரே ஒரு ஒன்றியத்தை மட்டும் பிரிக்க மறந்துவிட்டது,
38 மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்களை திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சியினரும் நிர்வாக ரீதியாக இரண்டு முதல் நான்கு வரையில் பிரித்து ஒன்றிய செயலாளர்களை நியமித்துள்ளனர்.
குறிப்பாக திமுக தலைமை, வருவாய் மாவட்டங்களை கட்சி நிர்வாக ரீதியாக மூன்று சட்டமன்றத் தொகுதிக்கு, இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமித்தது. அதுபோலவே ஊராட்சி ஒன்றியங்களையும் இரண்டு முதல் நான்கு வரையில் பிரித்து ஒன்றிய செயலாளர்களை நியமித்துள்ளது.
இப்படி 385 ஊராட்சி ஒன்றியங்களில் பிரிக்கப்படாத ஒரே ஊராட்சி ஒன்றியம் கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்தான். கடலூர் மாவட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன.
இவற்றை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என பிரித்து நான்கு ஒன்றிய செயலாளர்களை நியமித்துள்ளனர். பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பண்ருட்டி ஒன்றியத்தை தெற்கு- வடக்கு என பிரித்தனர்.
ஆனால் அதே பண்ருட்டி தொகுதியில் உள்ள அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளும் 84 திமுக கிளைகளும் இருந்தும் இரண்டு ஒன்றியமாகக் கூட பிரிக்க முடியவில்லை இன்று வரையில்.
“அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் அமைச்சர் வெ.கணேசனிடம் முறையிட்டோம். எந்த பலனும் இல்லை, அறிவாலயத்தில் உள்ள அன்பகம் கலையிடம் புகாராக கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. 84 கிளைக்கும் 42 ஊராட்சிக்கும் ஒரே ஒருவர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியத்தில் பிரிக்காத ஒன்றியம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் மட்டும்தான். ஒரு வேலை அண்ணாகிராமம் ஒன்றியத்தை திமுக தலைமை மறந்து விட்டதா, அல்லது அப்படி ஒரு ஒன்றியம் இருப்பது தெரியாதா?” என முணுமுணுக்கிறார்கள் உடன் பிறப்புகள்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இஸ்ரோ தலைவர் பதவி: சோம்நாத்துக்கு தடையாக இருந்தாரா சிவன்?
பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு!