எடப்பாடியைச் சந்திக்க எல்.கே.சுதீஷ் திட்டமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பது தொடர்பாக வெளியான தகவலுக்கு தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட தேமுதிக, 2021 தேர்தலின் போது தொகுதிப் பங்கீட்டில் சமரசம் ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகியது. அமமுகவுடன் கூட்டணி வைத்து 65 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதாகத் தெரிவித்து தேமுதிக ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த்தை வேட்பாளராகவும் அறிவித்தது அக்கட்சித் தலைமை.

இந்தச்சூழலில் ஆனந்த் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணையப் போவதாகத் தகவல் பரப்பப்பட்டது. இதற்கு ஆனந்த் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டதாக கூறப்பட்டது.

இதனால், தேமுதிக தனது வேட்பாளரைத் திரும்ப பெற்று, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறதா என கேள்வியும் எழுந்தது.

இதுதொடர்பாக எல்.கே.சுதீஷ் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மை அல்ல. தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம். பிப்ரவரி 1ஆம் தேதி எனது தலைமையில் தேமுதிக வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா

பட்ஜெட் விவாதம்: ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு!

பாஜகவினருக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts