கோவை தொகுதி தமிழ்நாடு முழுதும் எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பான தொகுதியாக இருந்தது. குறிப்பாக அங்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் தமிழ்நாடு முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் கோவையில் இறங்கி வேலை பார்த்தனர். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் 63.8% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இந்த தேர்தலில் கோவையின் வாக்கு சதவீதம் 7 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து 71.17% ஆக பதிவாகியுள்ளது.
அதிமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு 250 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை வரை கோவை தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிமுக தரப்பு பெரும் நம்பிக்கையுடன் இருந்தது.
ஆனால் மதியத்திற்குப் பிறகு கோவையில் இலை ஓட்டுகள் தாமரைக்கு விழுந்திருப்பதாக அதிமுக நிர்வாகிகளுக்கு தகவல் வந்திருக்கிறது. இதன் காரணமாக கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக நிர்வாகிகளை அவசரமாக கூப்பிட்டு விசாரணை நடத்திக் கொண்டிருப்பதாக முக்கிய நிர்வாகிகள் தரப்பில் சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!
அரசு அலுவலர்கள் ஆதங்கம்… அரசாணையை வாபஸ் பெற்றது தமிழக அரசு!
மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!