அமீர் கான் நடிப்பில் இன்று ( ஆகஸ்ட் 11 ) வெளியான லால் சிங் சத்தா படத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஹாலிவுட் படமான ஃபரஸ்ட் கம்பின் ரீமேக்கில் உருவான படம் லால் சிங் சத்தா. தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்திற்கு பிறகு அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.
லால் சிங் சத்தாவில் தெலுங்கு நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் இர்பான் பதான், லால் சிங் சத்தா படத்தை பார்த்து பாராட்டி தனது ட்விட்டரில் இன்று ( ஆகஸ்ட் 11 ) பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லால் சிங் சத்தா படத்தை ஜாலியாக பார்த்தேன். தன்னுடைய நல்ல மனசால் லால் உங்களை கவர்வான். எப்போதும் போல அமீர் கான் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்துள்ளார். நல்ல படம் பார்த்த உணர்வை அளித்த அமீர் கான் பட நிறுவனத்துக்கு பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்