சி.வி.சண்முகம் அளித்த புகார்: தேர்தல் அலுவலர் சொன்ன சுவாரஸ்யம்!

அரசியல்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரில் எனது குடும்பமே இந்த ஊரில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் சிவகுமார் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கில் தேர்தல் நடத்தும் அலுவலகர் சிவகுமார் இன்று (பிப்ரவரி 24) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “நாளை மாலை 5 மணியோடு பிரச்சாரங்கள் நிறைவடைகிறது. எனவே அந்த நேரத்தோடு அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் .
முக்கியமாக 107 தேர்தல் பணிமனைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதுகுறித்து வேட்பாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் நாளை 5 மணியோடு இந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். நேற்றைய தினம் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு வருவது தொடர்பாகப் பயிற்சி வழங்கினோம்.

இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. படிப்படியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “பணப்பட்டுவாடா தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வரும் புகார்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை.

பரிசுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆதாரப்பூர்வமாகப் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குக்கர் விநியோகித்தது உள்ளிட்ட புகார் தொடர்பாக இரண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து 13 புகார்கள் வந்தது. இதில் சி.வி.சண்முகம் ஒரு சுவாரஸ்யமான புகார் கொடுத்தார். 20,000 வாக்காளர்கள் தொகுதியில் இல்லை, போலியாகச் சேர்த்துவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதில் மாநகராட்சி ஆணையர் குடியிருப்பில் வசிக்கும் நான், எனது மனைவி, மகனும் இந்த ஊரிலேயே இல்லை என்று எழுதி கொடுத்திருக்கிறார்.

5/1/2023 அன்று இறுதியாக வெளியிட்ட வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சிகள் முன்னிலையில் தான் வெளியிடப்பட்டது. அப்போது எந்த எதிர்ப்பும் இல்லை.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் மீது ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கூட ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டார்கள் அதுவும் கொடுக்கப்பட்டது.

இப்போதைக்குப் பிரச்சாரத்துக்குத் தடை என்று எதுவுமில்லை.

19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் அங்குக் கூடுதலாகப் பாதுகாப்பு போடப்படும்” என்றார்.

பிரியா

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் : தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்

ஜெயலலிதா பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *