Intercaste marriage: Gang attacked CPM office! - Condemn political leaders!

சாதி மறுப்பு திருமணம்: சிபிஎம் அலுவலகம் சூறை… தலைவர்கள் கண்டனம்!

அரசியல்

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் சிபிஎம் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் இன்று (ஜூன் 15) கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் உதய தாட்சாயினி. நம்பிக்கை நகரை சேர்ந்தவர் மதன் குமார். இவர்கள் இருவரும் 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு இருவீட்டு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருவருக்கும் ஜூன் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

சிபிஎம் அலுவலகத்தை தாக்கிய பெண் வீட்டார்

திருமணம் குறித்த தகவல் அறிந்த பெண் வீட்டார் கட்சி அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் பெண் வீட்டாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கட்சி அலுவலகத்தின் கண்ணாடி, இருக்கைகள், கதவு என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக வெள்ளாளர் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா, மணப்பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல் உட்பட 13 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Intercaste marriage: Gang attacked CPM office! - Condemn political leaders!

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம்.

தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.

சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கண்டனம்!

Intercaste marriage: Gang attacked CPM office! - Condemn political leaders!

“இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் – வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இரு வேறு சாதிகளைச் சார்ந்த ஒரு இளம் தம்பதியருக்கு திருமணம் செய்து வைத்ததற்காக திருநெல்வேலி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அண்மைக்காலமாக தென் மாவட்டங்களில் சாதிய படுகொலைகள், கூலிப்படை கலாச்சாரங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்து கொண்டதற்கு உதவிகரமாக இருந்ததற்கு நூறாண்டுக் காலம் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

இது ஆணவத்தின் உச்சக்கட்டம். இவ்வன்முறை சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறேன்” என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று (ஜூன் 15) வெளியிட்ட கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக தலைவர் பொதுச்செயலாளர் கண்டனம்!

Intercaste marriage: Gang attacked CPM office! - Condemn political leaders!

“திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன்குமார் (வயது 28), பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) இணையர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த இணையருக்கு பொதுவுடமை இயக்கத் தோழர்கள் ஆதரவாக இருந்ததால் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதற்குக் காரணமானவர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 15) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈரோடு கூத்துப்பட்டறையின் ஆத்ம தரிசனம்!

திருப்பத்தூர்: கார் பார்க்கிங்கில் பதுங்கிய சிறுத்தை பிடிபட்டது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *