Inspector death threat to panchayat chairman

டிஜிபிக்கே பெப்பே… 9 மெமோக்களை ஊதித் தள்ளிய இன்ஸ்பெக்டர்- சுழலும் ஆடியோ சர்ச்சை!

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு டிஜிபி உத்தரவுப்படி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள், நீண்டகாலம் ஒரே மாவட்டத்தில் பணி செய்துவரும் போலீசார் சரகம் விட்டு சரகம், அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்பட்டனர். Inspector death threat to panchayat chairman

ஆனால் விழுப்புரம் மாவட்டம்  வானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மூன்றே கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரோவில் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது விழுப்புரம் காவல்துறையில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழலில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை மையமாக வைத்து இன்னொரு சர்ச்சையும் வெடித்திருக்கிறது.  திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனுக்கு எதிராக பொய் வழக்கு போட இன்ஸ்பெக்டர் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு வெங்கடேசன் பதிலளிக்கும் வகையிலும் இருவேறு வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

ஆரோவில் காவல் நிலையத்தில் 2008-2009 இல் உதவி ஆய்வாளராக இருந்தார் ஹரிகிருஷ்ணன். அந்த சமயத்தில் இந்த காவல் நிலையத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசாக வெங்கடேசன் இருந்தார்.

இவர் தற்போது திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். எஸ்.ஐ ஹரிகிருஷ்ணனுக்காக வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வெங்கடேசன் செய்ததாக அப்போதே போலீஸ் வட்டாரத்தில் புகைச்சல் இருந்தது.
ஹரிகிருஷ்ணன் இன்ஸ்பெக்டராக வானூருக்கு வந்ததிலிருந்து இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கக்கூடிய வெங்கடேசனை பழிவாங்க வழக்கு போடுவதற்கு திட்டமிட்டிருப்பதாக அதிமுக ஐடி விங்கை சேர்ந்த ஜெகனிடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பேசும் உரையாடல் வெளியானது.

அதில், “வெங்கடேசன் நல்லவனே கிடையாது, திருட்டு பையன். இதற்கு மேற்பட்டு கிட்ட வந்தாகூட அவன சேர்க்கமாட்டேன். எல்லா ரவுடிகள்கிட்டயும் தொடர்புல இருக்கான், வெகு விரைவில் உள்ளே போவான் பாரு. நான் ரவுடி… நான் ரவுடினு அவனே சொல்லிட்டு இருக்கான்” என்ற ரீதியில் இன்ஸ்பெக்டர் பேசிய 75 வினாடி உரையாடல் வெளியாகி அது வெங்கடேசன் காதுக்கும் சென்றது.

உடனே தனது குமுறல்களை வெங்கடேசன் ஒரு ஆடியோவாக வெளியிட்டார்.
அதில், ”நான் ரவுடி இல்ல சார். ரவுடி யாருனு கடவுளுக்கு தெரியும். தேவையில்லாமல் என் பாவத்தை எடுத்து கொட்டிக்காதீங்க. அதுக்கான பலன கண்டிப்பாக உங்களுக்கு கடவுள் கொடுப்பாரு.
என்னைய கெட்ட வார்த்தையில பேசாதீங்க. உங்களுக்காக அவ்வளோ உழைச்சிருக்கேன். உங்க வீட்டுல இருக்க ஒவ்வொரு பொருளுக்கும் என்னுடைய உழைப்பு இருக்கு. நான் உண்மையா இருந்தேன்.
எவனோ, எதையோ சொல்றத வச்சிக்கிட்டு பேசாதீங்க. இனி செத்தா கூட உங்கக்கிட்ட வரமாட்டேன். நான் செத்துட்டேன்னு கேள்விப்பட்டா கூட நீங்க வராதீங்க. இதோடு என் கதைய விட்ருங்க.. உங்களை எதிர்த்து பேசமுடியாது. உங்களுக்கு பெரிய பெரிய ஆளுங்க சப்போட்டுக்கு இருக்காங்க, உங்களிடம் பணம் இருக்கு,
இதுக்கப்புறம் இதுமாதிரி ஏதாவது பண்ணீங்கன்னா, கண்டிப்பா மருத்து குடிச்சிட்டு செத்துருவேன். ஜிப்மருக்கு எல்லா மீடியாவையும் வரவச்சு வாக்குமூலம் கொடுத்துடுவேன், அப்புறம் நீங்கள் சேர்த்தது எல்லாம் வீணாகப் போய்விடும். என்னைய விட்டுங்க” என வெங்கடேசன் பேசுவது பதிவாகியுள்ளது.

இந்த இரண்டு ஆடியோவை தவிர மூன்றாவது ஆடியோ ஒன்றும் வெளியானது.

2022இல் வானூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், எதிர் தரப்பினரை தொடர்பு கொண்டு போட்டி புகார் கொடுக்க சொல்லி கேட்டு இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பேசும் ஆடியோ அது.
கௌதம் என்பவருடைய குடும்ப பிரச்சினையில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவரிடமே பேசும் இன்ஸ்பெக்டர் ஹரிகிரிஷ்ணன்,

“நீ என்ன பண்ற… உங்கள் அம்மா ஜாக்கெட் கிழிச்சுட்டு புடவை கிழிச்சுட்டு வாங்க பொம்பளைங்க பெயரில் சேர்த்து புகார் கொடுங்க. ராஜாராம் மீது கொடுங்க. , உடனே வாங்க உடனே வாங்க, டேய் நான் சொன்னனு சொல்லாதே..” என்று பேசுகிறார்.
இந்த ஆடியோவும் இப்போது வெளியாகி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை மையமாக வைத்து சர்ச்சையை அதிகமாக்கியிருக்கிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீசார் மத்தியில் மேலும் விசாரித்தபோது,

“கௌதம் என்பவரிடம் பேசிய அந்த விவகாரத்துக்காக அப்போதைய எஸ்.பி ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனுக்கு மெமோ கொடுத்து சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்தார். ஆனாலும் தனது அரசியல் செல்வாக்கால் தப்பித்துவிட்டார் இன்ஸ்பெக்டர்.
2016-2018 செஞ்சி இன்ஸ்பெக்டராக ஹரிகிருஷ்ணன் இருந்தபோது மணல் கொள்ளை, கள்ளச்சாராயம், லாட்டரி விற்பனை அதிகமாக இருக்கிறது என்று அப்போதிருந்த எஸ்.பி. ஜெயக்குமார் ஓப்பன் மைக்கில் கேட்டார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனும்  உயரதிகாரியை எதிர்த்து ஒருமையில்  பதில் சொன்னார்.  அந்த சம்பவம் அப்போது வடக்கு மண்டல ஐஜிக்கு தெரிந்து, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை வேலூர் சரகத்திற்கு மாற்றினார். அங்கிருந்து அதிமுக பிரமுகர் தொல்லாம்பூர் கண்ணன் முயற்சியில் மீண்டும் விழுப்புரம் மாவட்டம் வானூர் காவல் நிலையத்திற்கு வந்தார். இந்த  இன்ஸ்பெக்டருக்கு பலகோடிகள் சொத்துக்கள் உள்ளது” என்றனர்.

மேலும் அவர்கள், “இந்த இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் 1993இல் காவலராக மணிமுத்தாறு பட்டாலியனில் பயிற்சி பெற்றார், அதன்பிறகு சென்னை பட்டாலியன் (சிறப்பு காவல் படை)ஐந்தாம் அணிக்கு வந்தபோது ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் செக் போஸ்டில் டியூட்டி பார்க்கும் போது விடுதிகளுக்கு பெண்களை அழைத்து செல்லும் புரோக்கர்களை கண்டுபிடித்து அப்போதே மாமூல் வசூல் செய்தார் என்று புகார்கள் வந்தன.

கடலூர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த போது, புதுச்சேரிக்கு சென்று மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை சட்ட விரோதமாக கடலூர் எடுத்துச் சென்றதாக இவரை எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் பிடித்தார். நான் எஸ்.ஐ தேர்வு எழுதிருக்கேன். என் மீது கேசு போட்டுடாதிங்க சார் என்று அப்போது கெஞ்சி  தப்பித்தார் ஹரிகிருஷ்ணன். நீயெல்லாம் எஸ்.ஐ-யாக வந்தால் நாடு என்ன ஆகப்போகுதோ எனக் கேட்டுவிட்டு, அனுப்பிவைத்தார் அந்த எஸ்.ஐ. அவர் சொன்னதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

அதன்பின் எஸ்.ஐயாக 2000இல் தேர்வானார் ஹரிகிருஷ்ணன்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் எஸ்ஐயாக இருந்த போது மனைவியுடன் காரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது மணல் எடுத்து செல்லும் லாரியை பார்த்து மடக்கி, காரில் இருந்த தனது மனைவியை ஆர் டி ஒ என்று சொல்லி பணம் வாங்கிக்கொண்டு திருமண மண்டபத்திற்கு சென்றார். எஸ்.ஐ மற்றும் அவரது மனைவியும், கலந்துக்கொண்ட திருமண நிகழ்ச்சிக்கு லாரி ஓட்டுநரும் வந்திருந்தார். அங்கே எஸ்.ஐ மனைவியை பார்த்த லாரி ஓட்டுநர் ஷாக் ஆகி இதை போலீஸாரிடம் அப்போதே தெரிவித்துள்ளார்.

இந்த இன்ஸ்பெக்டர் 9 முறை மெமோ பெற்று, அனைத்தையும் கேன்சல் செய்ய வைத்து தப்பித்துள்ளார். இப்போதும் அரசு கிளாஸ் 1 கான்ட்ராக்டர் தொல்லாம்பூர் கண்ணன் மூலமாகத்தான் செல்வாக்கு செலுத்தி வருகிறார் இன்ஸ்பெக்டர்” என்கிறார்கள்.

இவ்வளவு புகார்களுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடமே பேசுவதற்காக அவரது அலைபேசிக்கு முயற்சித்தோம். தொடர்ந்து முயன்ற நிலையில் போனை எடுத்தவரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டதும், ‘நான் மீட்டிங்ல இருக்கேன்’ என்று சொல்லி துண்டித்துவிட்டார்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுகவுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பிரேமலதா

பெண் குழந்தை பிறப்பதற்கு யார் காரணம்?: நீதிமன்றத்தில் வகுப்பெடுத்த நீதிபதி!

கமல் படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் நடிகை!

அங்கித் திவாரி நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Inspector death threat to panchayat chairman

+1
0
+1
2
+1
2
+1
1
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *