இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக அளவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி. இவரது மனைவி சுதா மூர்த்தி. இவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரும் ஆவார்.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளரான சுதா மூர்த்தி தொழில்நுட்ப கட்டுரைகளை எழுதியுள்ளார். மூர்த்தி அறக்கட்டளை தலைவராக இருக்கும் இவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலையில், ’மூர்த்தி கிளாசிக்கள் லைப்ரரி ஆஃப் இந்தியா’ என்ற நூலகத்தை உருவாக்கினார். 2006ல் பத்மஸ்ரீ, 2023ல் பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில் சுதா மூர்த்தி மாநிலங்களை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் பரிந்துரைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மகத்தானது. மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது பெண் சக்திக்கு சிறந்த சான்று. நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றல் ஒரு எடுத்துக்காட்டாகும்” என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “மகளிர் தினத்தில் எனக்கு இது மிகப்பெரிய பரிசு, நாட்டுக்கு பணியாற்றுவதற்கான புதிய பொறுப்பு” என கூறி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் சுதா மூர்த்தி.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெங்களூரு குடிநீர் தட்டுப்பாடு : கார் கழுவ தடை… பள்ளிகள் மூடல்!
வேளச்சேரி- தாம்பரம்: மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா?: எடப்பாடி பழனிசாமி பதில்!
நடிகர் அஜித்குமார் எப்படி இருக்கிறார்? : வெளியான புதிய தகவல்!